சென்னை ஏர்போர்ட் வேலை வாய்ப்பு; 393 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னை விமான நிலைய கார்கோ சேவை நிறுவன வேலைவாய்ப்பு; 393 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை விமான நிலைய கார்கோ சேவை நிறுவன வேலைவாய்ப்பு; 393 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
Chennai Airport

சென்னை, விஜயவாடா, கோவா உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் நிறுவனத்தில் உதவியாளர், பாதுகாப்பு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 393 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் 30.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

ASSISTANT (SECURITY) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 166

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 01.06.2025 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஒ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 21,500 

SECURITY SCREENER 

காலியிடங்களின் எண்ணிக்கை: 227

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.06.2025 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஒ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 30,000

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.aaiclas.aero என்ற இணையதளப்பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய www.aaiclas.aero  என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Chennai Airport Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: