ரூ.1.20 லட்சம் சம்பளத்தில் வேலை – அழைக்கிறது ஆவின்

ஆவின் நிறுவனத்தின் சேலம் மாவட்ட கிளையில் காலியாக உள்ள மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

By: Updated: August 1, 2019, 08:00:47 PM

ஆவின் நிறுவனத்தின் சேலம் மாவட்ட கிளையில் காலியாக உள்ள மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணி : மேனேஜர் (கணக்கு)

கல்வித் தகுதி : சி.ஏ. அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ. (இன்டர் ) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30.
இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

சம்பளம் : ரூ.37,700 முதல் ரூ. 1,19,500 வரை

விண்ணப்பப் படிவம் பெற : https://aavinmilk.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

பொது மேலாளர்,
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்,
சித்தனூர்,
தளவாய்பட்டி – 636 302.

கடைசி நாள் : ஆகஸ்ட் 19, 2019

பணியிடம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு https://aavinmilk.com/documents/20142/0/cnslm250719.pdf/ என்ற இணையதள பக்கத்தினை பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Aavin recruitment

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X