சென்னையில் இயங்கி வரும் முன்னணி மென்பொருள் நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture) நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சர் நிறுவனம், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மற்றும் கோவையில் அக்சென்ச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள அக்சென்ச்சர் நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அப்ளிகேஷன் டெவலப்பர் பணிக்கு டிகிரி அல்லது இன்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், ASP.NET MVC, சி (C), எஸ்.க்யூ.எல் சர்வர் (SQL Server) தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script), JQuery, Angular JS ஆகியவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.
அப்ளிகேஷன் டெவலப்பர் பணிக்கு தேர்வாகுபவர்கள் ASP.NET MC, C, SQL Server ஐப் பயன்படுத்தி அப்ளிகேஷன் டிசைன், அப்ளிகேஷன் டெவலப், அப்ளிகேஷன் மெயின்டெயின் ஆகிய பணிகளை செய்ய வேண்டியிருக்கும். மேலும் குறியீடு மதிப்புரைகள் (Code Reviews), அலகு சோதனை (Unit Testing), ஒருங்கிணைப்பு சோதனை (Integration Testing) உள்ளிட்டவை பணிகளையும் செய்ய வேண்டியிருக்கும்.
எனவே, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனால், தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படும் வரை விண்ணப்பங்கள் திறந்திருக்கும். தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் விண்ணப்பங்கள் மூடப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“