சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் முன்னணி மென்பொருள் நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture) நிறுவனத்தில் அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் (Application Support Engineer) பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சர் நிறுவனம், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மற்றும் கோவையில் அக்சென்ச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அக்சென்ச்சர் நிறுவனத்தில் அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய துறையில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும், React.js, Redux, Node.js மற்றும் GrapQl உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். Debugging toolsகளான Chrome DevTools மற்றும் React Developer Tools-ல் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS) மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script) உள்ளிட்ட வெப் டெவலப்மென்ட் கான்செப்ட்டுகள் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் React.js பயன்படுத்தி பிரச்சனைகளை தீர்க்க முடிந்தவராக இருக்க வேண்டும். அதோடு React.js-ல் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனால், தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படும் வரை விண்ணப்பங்கள் திறந்திருக்கும். தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் விண்ணப்பங்கள் மூடப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“