Advertisment

3 இடங்கள்; சென்னை ஆதி திராவிடர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பணி: யார் விண்ணப்பிக்கலாம்?

சென்னையில் உள்ள ஆதி திராவிடர் தொடக்கப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
student and teacher

சென்னையில் உள்ள 2 ஆதி திராவிடர் தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

Advertisment

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட குறிப்பில், "ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வளசரவாக்கம், வடபெரும்பாக்கம் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும். முன்னுரிமை ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது பின்வரும் முன்னுரிமை பரிசீலிக்க்கப்படும். இடைநிலை ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் .

இடைநிலை ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.12,000 சம்பளத்தில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள், அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள் உள்ளி தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2-ம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ வரும் 19-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment