நான்காண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த வருடம் கட் ஆஃப் மதிப்பெண் குறைந்திருந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐ.ஐ.டி) இளங்கலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான கூட்டு நுழைவுத் தேர்வில் (அட்வான்ஸ்டு) தகுதி சதவீதம் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட JEE (முதன்மை) 2023 இன் முடிவுகள், உயர்வைக் கண்டுள்ளன.
தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள தகுதிப் பட்டியலின்படி, ஒரு மாணவி உட்பட 43 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள்: ஜே.இ.இ ரிசல்ட் வெளியீடு; டாப் ரேங்க் யார், யார்?
இதில் தெலுங்கானாவில் இருந்து 11 பேர், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா ஐந்து பேர்; உத்தரபிரதேசத்தில் இருந்து நான்கு, குஜராத் மற்றும் கர்நாடகாவில் இருந்து தலா மூன்று, டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தலா இரண்டு; மற்றும் ஹரியானா, சண்டிகர், மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு, பீகார், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து தலா ஒன்று.
சதவீத மதிப்பெண் என்பது ஒரு ஒப்பீட்டு முடிவு ஆகும், இது கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணுக்கு சமமான அல்லது குறைவான மதிப்பெண்களைப் பெற்ற விண்ணப்பதாரர்களின் விகிதத்தைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு தேர்வில் 70 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவி, தேர்வெழுதியவர்களில் 70 சதவீதத்தை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்று அர்த்தம்.
JEE முதன்மை தேர்வு என்பது, தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NITகள்) மற்றும் பிற மத்திய நிதியுதவி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் BE/ BTech படிப்புகளுக்கான நுழைவு தேர்வு என்பதைத் தவிர, JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான தகுதித் தேர்வாகும். தகுதியான கட்-ஆஃப்கள் உள்ளவர்கள் மட்டுமே ஐ.ஐ.டி.,களில் சேர்க்கை பெறுவதற்கான JEE அட்வான்ஸ்டு தேர்வு எழுத முடியும்.
இம்முறை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ள ஜே.இ.இ (அட்வான்ஸ்டு) தேர்வுக்கு 2,50,255 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 39.4 சதவீதம் பொதுப்பிரிவினர், 14.99 சதவீதம் பேர் எஸ்.சி பிரிவினர், 7.49 சதவீதம் பேர் எஸ்.டி பிரிவினர் மற்றும் OBC பிரிவில் இருந்து 27.01 சதவீதம்.
பொதுப் பிரிவினருக்கு, JEE அட்வான்ஸ்டு 2023 தேர்வுக்கான கட்-ஆஃப் அல்லது தகுதி சதவீதம் 90.77 ஆகும், இது 2022 இல் 88.4 ஆகவும், 2021 இல் 87.9 ஆகவும் இருந்தது. அதேநேரம் கட்-ஆஃப் 2020 மற்றும் 2019 இல் முறையே 90.3 மற்றும் 89.7 ஆக இருந்தது.
பட்டியல் சாதி பிரிவினருக்கு, இந்த முறை தகுதி சதவீதம் 51.97 ஆகும். இது 2022 இல் 43.08 ஆகவும், 2021 இல் 46.8 ஆகவும், 2020 இல் 50.1 ஆகவும், 2019 இல் 54.01 ஆகவும் இருந்தது.
பழங்குடி மாணவர்களுக்கான தகுதி சதவீதம் இம்முறை 37.23 ஆகும். இது 2022 இல் 26.7 ஆகவும், 2021 இல் 34.6 ஆகவும், 2020 இல் 39.06 ஆகவும் மற்றும் 2019 இல் 44.3 ஆகவும் இருந்தது.
OBC (கிரீமி லேயர் அல்லாத) மாணவர்களுக்கான தகுதி சதவீதம் 73.61 ஆக அதிகரித்துள்ளது. இது 2022 இல் 67 ஆகவும், 2021 இல் 68.02 ஆகவும், 2020 இல் 72.8 ஆகவும் இருந்தது.
EWS பிரிவினருக்கு, இந்த முறை தகுதி சதவீதம் 75.62 ஆகும், இது கடந்த ஆண்டு 63.11 ஆக இருந்தது.
JEE (அட்வான்ஸ்டு) தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் மற்றும் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது, மேலும் 2022 இல் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையானது நான்கு ஆண்டுகளில் மிகக் குறைவாக 10.26 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு, மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கை 11.62 லட்சமாக உயர்ந்துள்ளது, அதில் 11.13 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஜனவரி 24 முதல் ஏப்ரல் 15 வரை 13 தேதிகளில் நடைபெற்ற தேர்வின் இரு அமர்வுகளிலும் கலந்து கொண்டனர். இந்த அமர்வுகளில் சிறந்த மதிப்பெண் சேர்க்கைக்கு பயன்படுத்தப்படும்.
முதலிடம் பிடித்தவர்களின் சமூக வகைப்பாட்டைப் பொறுத்தவரை 32 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் எஸ்.சி, மூன்று EWS, ஏழு பேர் ஓ.பி.சி என்று தெரியவந்துள்ளது. ST அடைப்புக்குறியில் அதிகபட்ச சதவீதம் 99.99 ஆகும்.
JEE முதன்மை தேர்வு 2023க்கு தகுதி பெறுவதற்கான 12 ஆம் வகுப்பு செயல்திறன் அளவுகோல் 75 சதவிகிதத்தை NTA மீண்டும் கொண்டு வந்துள்ளது. 2020 இல் கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கிய பின்னர் நடைபெற்ற நுழைவுத் தேர்வின் முந்தைய மூன்று பதிப்புகளில் இந்தத் தேவை விலக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.