/tamil-ie/media/media_files/uploads/2021/03/sahasra-budhe.jpg)
புதிய கல்விக் கொள்கையின்படி கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2021 கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இளநிலை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு மட்டுமே இதுவரை நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த கல்வியாண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய இயற்கை மருத்துவ படிப்புகளுக்கும், பி.எஸ்சி நர்சிங் மற்றும் உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், நுண்ணறிவியல் போன்ற கலை அறிவியல் கல்லூரியில் உள்ள உயிர் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையின்படி, கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்புத்தே தெரிவித்துள்ளார். மேலும், புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் ஆண்டுகளில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்படுவதால் தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று என மாணவர்களும், கல்வியாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.