Advertisment

பொறியியல், டிப்ளமோ கல்விக் கட்டணம் திடீர் உயர்வு: எந்த படிப்புக்கு எவ்வளவு?

பொறியியல், டிப்ளமோ, எம்.சி.ஏ மற்றும் எம்.பி.ஏ படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு; பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கான சம்பளமும் உயர்வு – அனைந்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

AICTE hikes Engineering, Diploma, MBA and MCA tuition fees: பொறியியல், டிப்ளமோ, எம்.சி.ஏ மற்றும் எம்.பி.ஏ படிப்புகளுக்கான கல்வி கட்டணங்களை ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ளது.

Advertisment

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (AICTE) நாடு முழுவதும் உள்ள தொழிற்கல்வி படிப்புகளுக்கான கட்டணங்களை மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி கட்டணம் தொடர்பாக தேசிய கட்டண குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த கல்வி கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதே போல 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியர்களின் சம்பள விகிதங்களும் மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய விகிதங்களை நாடு முழுவதும் உள்ள தொழிற்கல்வி நிலையங்கள் வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரைத்துள்ளது.

இதன்படி பி.இ., (B.E) பி.டெக்.,(B.Tech) பி.ஆர்க்.,(B.Arch) உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த கட்டணம் 55,000 இருந்து 1,15,000 வரை இருந்தது வந்தது.

இதே போல், டிப்ளமோ படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சம் ரூ.67,900 முதல் அதிகபட்சம் ரூ.1,40,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் எம்.இ., (M.E) எம்.டெக்., (M.Tech) எம்.ஆர்க்., (M.Arch) உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதில் குறைந்தபட்சமாக ரூ.1,40,000 முதல் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, 3 ஆண்டு MCA படிப்புக்கு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ1,94,100 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ85,000, அதிகபட்சமாக ரூ1,95,200 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Post Office GDS Job: தேர்வு இல்லாமல் 38,926 பேருக்கு வேலை; ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

மேலும், 7ஆவது ஊதியக்குழு பரிந்துரையின் படி ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்கிட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரைத்துள்ளது. அதன்படி உதவி பேராசிரியர்களுக்கான சம்பளம் ரூ.1,37,189 என்றும், பேராசிரியர்களுக்கான சம்பளம் ரூ.2,60,379 என்றும் மாற்றி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Engineering Aicte
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment