அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) இந்திய மாணவர்களை உலகளாவிய போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிப்பதற்காக "வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கான மாணவர்களுக்கான ஆதரவு" (SSPCA) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
"வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கான மாணவர்களுக்கான ஆதரவு" (SSPCA) திட்டம் என்பது, சர்வதேச அறிவியல் நிகழ்வுகளில் போட்டியிட விரும்பும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிதி ரீதியாக உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
SSPCA முன்முயற்சியானது, இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள தனிப்பட்ட மாணவர்கள் அல்லது மாணவர் குழுக்களுக்கு, உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த பயண நிதி உதவி, வழிகாட்டுதல் மற்றும் தளவாட உதவி உள்ளிட்ட ஆதரவை வழங்குகிறது. கூடுதலாக, இது உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களை அணுகும் வாய்ப்புகளை எளிதாக்குகிறது.
சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பயணம், பதிவுக் கட்டணம், விசா விண்ணப்பங்கள், தங்குமிடம், விமான நிலைய வரிகள், பயணக் காப்பீடு மற்றும் போட்டி தொடர்பான உபகரணச் செலவுகள் போன்ற செலவுகளை உள்ளடக்கிய AICTE திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.
ஏ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் டிப்ளமோ, பி.இ/பி.டெக், ஒருங்கிணைந்த எம்.டெக், எம்.இ/எம்.டெக் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த நிதி உதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவர் குழுவும் தங்கள் படிப்பின் போது ஒருமுறை இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற தகுதியுடையவர்கள்.
விண்ணப்ப செயல்முறையானது AICTE புதுதில்லிக்கு "ஆஃப்லைனில்" விண்ணப்பிப்பதை உள்ளடக்கியது, இதில் போட்டி அமைப்பாளர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளும் கடிதம் மற்றும் முழு போட்டி விவரங்கள், நிகழ்வுக்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்பு சமர்பிக்கப்பட வேண்டும்.
நிதியுதவி வெளியீட்டை விரைவுபடுத்த, விண்ணப்பதாரர்கள் சர்வதேச போட்டியின் பின்னர் ஒரு மாதத்திற்குள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், இதில் செலவின விவரங்கள், தொழில்நுட்ப அறிக்கை, பெறப்பட்ட உதவி விவரங்கள், நிறுவனம் வழங்கிய தொகை மற்றும் பங்கேற்பு சான்றிதழ் உட்பட பல விவரங்கள் அடங்கும்.
"உலகம் பெருகிய முறையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது மாணவர்களுக்கு திறன் மேம்பாடு, அறிவு பரிமாற்றம் மற்றும் கலாச்சார செழுமைக்கான விலைமதிப்பற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. இதுபோன்ற அனுபவங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாணவர்கள் தங்கள் திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்துவதற்கு ஏ.ஐ.சி.டி.இ உறுதிபூண்டுள்ளது," என திட்டத்தை தொடங்கி வைத்து ஏ.ஐ.சி.டி.இ தலைவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“