NIRF Ranking 2024 Top Medical Colleges: அதன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து, எய்ம்ஸ் (AIIMS) டெல்லி இந்த ஆண்டும் சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதற்கு அடுத்தபடியாக சண்டிகரின் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: AIIMS Delhi, PGIMER continue to be India’s best medical colleges, check top 10: NIRF Rankings 2024
இதற்கான தரவரிசைப் பட்டியலை கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டது.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் பெங்களூரின் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்) ஆகியவை முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டன. ஐந்தாவது இடத்தை புதுச்சேரி ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தக்கவைத்துள்ளது.
சிறந்த 20 மருத்துவக் கல்லூரிகள்
1). எய்ம்ஸ், டெல்லி
2). பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER) சண்டிகர்
3). கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்
4). தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம், பெங்களூரு
5). ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி
6). சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம்
7). பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
8). அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர்
9). கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிப்பால்
10). சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை
11). டாக்டர் டி.ஒய்.பாட்டீல் வித்யாபீடம்
12). சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை
13). ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்
14). எய்ம்ஸ் ரிஷிகேஷ்
15). எய்ம்ஸ் புவனேஸ்வர்
16). எய்ம்ஸ் ஜோத்பூர்
17). வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரி & சப்தர்ஜங் மருத்துவமனை
18). எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை
19). கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம்
20). ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
2023 ஆம் ஆண்டில், அமிர்த விஷ்வ வித்யாபீடம் 2022 இல் இருந்து 2023 இல் ஆறாவது இடத்திற்குத் தரத்தை மேம்படுத்தியது. 2022 இல் இருந்து தொடர்ந்து, சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம், லக்னோ தனது ஏழாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“