AIIMS Jobs: எய்ம்ஸ் வேலை வாய்ப்பு; 4576 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

எய்ம்ஸ் நிறுவனத்தின் பொது ஆட்சேர்ப்பு தேர்வு; 4576 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

எய்ம்ஸ் நிறுவனத்தின் பொது ஆட்சேர்ப்பு தேர்வு; 4576 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
அறுவை சிகிச்சைக்கு பணம் வாங்கிய எய்ம்ஸ் மருத்துவர்: விசாரணையில் கண்டுபிடிப்பு.. இட மாற்றம்

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) எனப்படும் எய்ம்ஸ் நிறுவனங்களில் உதவியாளர், கிளர்க், அசிஸ்டெண்ட் இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பவதற்கான பொது ஆட்சேர்ப்பு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 4576 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2025

காலியிடங்களின் எண்ணிக்கை: 4576

Advertisment

மொத்தம் 66 வகையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு பதவிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, வயதுத் தகுதி, சம்பள விபரம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டு உள்ள அறிவிப்பைப் பார்வையிடுங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rrp.aiimsexams.ac.in/advertisement/677cd0d849c05cf7ac74271a என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisment
Advertisements

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ. 3000, எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2400.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டு உள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Jobs Aiims

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: