Advertisment

ஏர் இந்தியா வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதிக்கு 100 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவன வேலைவாய்ப்பு; 100 பணியிடங்கள்; டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
air india express

ஏர் இந்தியா விமான சேவை நிறுவன வேலைவாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் உள்ள ஏர் இந்தியா பொறியியல் சேவை நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் 25.06.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Aircraft Technician (B1) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 72

கல்வித் தகுதி: AME Diploma/Certificate in Aircraft Maintenance Engineering/ Diploma in Mechanical/ Aeronautical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 27,940

Aircraft Technician (B2)

காலியிடங்களின் எண்ணிக்கை : 28

கல்வித் தகுதி: AME Diploma/Certificate in Aircraft Maintenance Engineering படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

வயதுத் தகுதி: 01.06.2024 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.aiesl.in/  என்ற இணையதளப்பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.aiesl.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment