சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் உள்ள ஏர் இந்தியா பொறியியல் சேவை நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கொள்ளலாம்.
Aircraft Technician (B1)
காலியிடங்களின் எண்ணிக்கை : 25
கல்வித் தகுதி: AME Diploma/Certificate in Aircraft Maintenance Engineering/ Diploma in Mechanical/ Aeronautical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 27,940
Aircraft Technician (B2)
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
கல்வித் தகுதி: AME Diploma/Certificate in Aircraft Maintenance Engineering/ Diploma in Electrical/Electronics/ Telecommunication/ Radio/ Instrumentation Engineering படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 27,940
வயதுத் தகுதி: 01.04.2024 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.
தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 25.04.2024
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: DGM (Engg) Office, AIESL, New Integrated Service Complex, Meenambakkam, Chennai.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.aiesl.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“