ஏர் இந்தியாவில் கொட்டி கிடக்குது வேலை – ஐடிஐ, டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்

Airindia : டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

airindia, recruitment, ITI, diploma, graduate,technician, newdelhi
airindia, recruitment, ITI, diploma, graduate,technician, newdelhi, ஏர்இந்தியா, பணிவாய்ப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரி, டெக்னீசியன், புதுடில்லி

ஏர் இந்தியா பொறியியல் சேவை லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் : 393

Aircraft Technician (Maint/Aircraft Overhaul, Engine) – 138
Aircraft Technician Avionics, Electrical, Instrument, Radio) – 102

கல்வித்தகுதி : Aircraft maintenance Engineering பிரிவில் டிப்ளமோ அல்லது மெக்கானிக்கல், ஏரோநட்டிக்கல் பிரிவில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூகேஷன், ரேடியோ, இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்து ஒன்று மற்றும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Skilled Trades Men – Fitter, Sheet Metal Trade – 47
Skilled Trades Men Painter Trade – 28
Skilled Trades Men Upholstery, Sewing Technology Trade – 31
Skilled Trades Men, X-Ray, NDT Trade – 09

கல்வித் தகுதி : இயற்பியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Skilled Trades Men, Electroplating Trade – 02

கல்வித் தகுதி : இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Skilled Trades Men, Welder Trade – 04
Skilled Trades Men, Machincal Trade – 06
Skilled Trades Men, Fiberglass, Carpenter – 07
Draughtsman – 05
Skilled Trades – Plant Electrical – 02
Skilled Trades – Plant Mechanical – 12

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி பொது பிரிவினர் 35 வயதிற்குள், ஓபிசி பிரிவினர் 38 வயதிற்குள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ. 20 ஆயிரம்

விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை Air India Engineering Services Limites என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Air India Engineering Services Limited,
Personnel Department, Avionics Complex, First Floor,
IGI Airport(Near New Custom House),
New Delhi – 110 037

நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் தேதி : 26.08.2019 முதல் 24.09.2019 வரை

விண்ணப்பிக்கும் முறை : ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் சுயசான்று செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airindia recruitment iti diploma graduates

Next Story
சிபிஎஸ்இ தேர்வு முறை மாற்றம்: பலன் கிடைக்குமா? நிபுணர்கள் கருத்துCBSE Board Exam Change experts opinion
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com