/indian-express-tamil/media/media_files/2025/09/27/alagappa-university-2025-09-27-09-57-46.jpg)
அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைப்புக் கல்லூரிகளில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Photograph: (Image Source: Alagappa University)
அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைப்புக் கல்லூரிகளில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு படித்த இளங்கலை மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகை, 2026 ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வோடு நிரந்தரமாக முடிவுக்கு வருகிறது என்று பல்கலைக்கழகத் தேர்வாணையர் எம். ஜோதிபாசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத் தேர்வாணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பபில், 2017-ம் ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற இளங்கலைப் (UG) பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், தாங்கள் தோல்வியடைந்த பாடங்களை எழுதுவதற்கு இதுவரை அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சிறப்புச் சலுகைக்கான கால அவகாசம், பல்கலைக்கழக விதிகளின்படி, வரும் 2026 ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் தேர்வோடு முடிவுக்கு வருகிறது.
எனவே, விடுபட்ட அல்லது அரியர் வைத்த பாடங்களைத் தீர்க்க விரும்பும் இளங்கலை மாணவர்கள், இந்த 2026 ஏப்ரல் தேர்வை தங்கள் கடைசி வாய்ப்பாகக் கருதிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அவர்களுக்குத் தேர்வெழுத அனுமதி வழங்கப்படாது.
முதுகலை மாணவர்களுக்கு (PG) கால அவகாசம் குறித்த தகவலையும் அவர் தெரிவித்தார். அதே 2017-ம் ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற முதுகலை மாணவர்களுக்குத் தேர்வெழுத வழங்கப்பட்ட கால அவகாசம், ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதப் பல்கலைக்கழகத் தேர்வோடு முடிவடைந்து விட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதன் மூலம், இளங்கலை மாணவர்களுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே கால அவகாசம் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மாணவர்கள் இந்த இறுதி வாய்ப்பைத் தவறவிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.