நீட் கவுன்சிலிங் போறீங்களா…எம்சிசியின் புதிய மாற்றத்தை தெரிஞ்சுக்கோங்க

நீட் கவுன்சிலிங் செயல்முறை நான்கு சுற்றுகளாக நடைபெறவுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல் எம்சிசியின் அதிகாரப்பூர்வ தளத்தில் mcc.nic.in வெளியிடப்பட்டுள்ளது

2021-22 கல்வியாண்டு முதல் நீட் இளங்கலை, முதுகலை கலந்தாய்வில் முக்கிய மாற்றங்களை எம்சிசி அறிவித்துள்ளது. அதன்படி நீட் கவுன்சிலிங் செயல்முறை நான்கு சுற்றுகளாக நடைபெறவுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல் எம்சிசியின் அதிகாரப்பூர்வ தளத்தில் mcc.nic.in வெளியிடப்பட்டுள்ளது. நீட் கலந்தாய்வில் வந்துள்ள மாற்றங்களை இச்செய்திதொகுப்பில் காணலாம்.

நீட் கலந்தாய்வு நான்கு சுற்று

இளங்கலை, முதுகலை மற்றும் பல மருத்துவத்துகான இடங்களுக்கு, எம்சிசி இந்த முறை நான்கு சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்துகிறது. அதன்படி, AIQ சுற்று 1, AIQ சுற்று 2, AIQ mop-up சுற்று and AIQ stray vacancy சுற்று ஆகும். 2020 வரை, MCC இரண்டு சுற்றுகளாக நீட் கவுன்சிலிங்கை நடத்தி வந்தது. மாப்-அப் மற்றும் stray vacancy ரவுண்டானது மத்திய மற்றும் டீம்டு பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் தான் நடத்தப்பட்டு வந்தது.

இருக்கை மாநில ஒதுக்கீடுக்கு மாற்றப்படாது.

நான்கு சுற்று கலந்தாய்வானது மத்தியக் குழுவிற்கு பங்களிக்கும் அரசுக் கல்லூரிகளின் இடங்களுக்கும், மத்திய நிதியுதவி பெறும் நிறுவனங்களின் இடங்களுக்கும் சேர்த்து நடத்தப்படும் என்பதால், சுற்று 2க்கு பிறகு, அந்த காலி இருக்கைகள் மீண்டும் மாநில அரசின் கைக்கு செல்லாது. அதற்கு பதிலாக, அந்த இடங்களுக்கான கவுன்சிலிங் மாப்-அப் மற்றும் stray vacancy சுற்றில் நடத்தப்படும்.

stray vacancy-இல் புதிய ரெஜிஸ்டருக்கு அனுமதி கிடையாது

விண்ணப்பத்தாரர்கள் தங்கள் தகுதியின் அடிப்படையில் 1, 2 சுற்றுகள் மற்றும் மாப் அப் சுற்றுக்கு புதிதாக பதிவு செய்யலாம். ஆனால், stray vacancy சுற்றில் புதிய பதிவு அனுமதிக்கப்படாது.

மத்திய நிறுவனங்களின் கவுன்சிலிங்கில் மாற்றம் இல்லை

4 சுற்று ஆன்லைன் மோடின் புதிய கவுன்சிலிங் திட்டம், மத்திய பல்கலைக்கழகங்களுக்குப் பின்பற்றப்படும் கவுன்சிலிங்கின் கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகை உட்பட நடைமுறையில் உள்ள விதிமுறைகளுடன் ஒத்துப்போகும் என எம்சிசி தெரிவித்துள்ளது.

சீட் அப்கிரேட் பிராசஸில் முக்கிய மாற்றம்

கவுன்சிலிங் பிராசஸில் MCC அறிமுகப்படுத்திய மற்றொரு பெரிய மாற்றம் என்னவென்றால், விண்ணப்பத்தாரர்கள் சுற்று ஒன்றுக்கு பிறகு கிடைத்த சீட்டை அப்கிரேட் செய்வதற்கு விண்ணப்பிக்கவோ அல்லது சுற்று 1க்குப் பிறகு இலவசமாக வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், ஒன்றாம் சுற்று முடிவுக்கு பிறகு, இரண்டாம் சுற்றுக்கு அப்ளை செய்யலாம். ஆனால், ரவுண்ட் 2 சுற்றுக்கு பிறகு, அவரால் மாக்-அப் மற்றும் stray vacancy திட்டத்தில் பங்கேற்கமுடியாது.

2 ஆம் ரவுண்டில் இருக்கை உறுதியானால், அவரால் அடுத்த சுற்றில் பங்கேற்க இயலாது. அதேநேரம், இரண்டாம் சுற்றில் இருக்கை தேர்வு செய்யாத போது, சம்ந்தப்படட் நபரின் கட்டணம் டெபாசிட் தொகை தியாகம் செய்தால், மீண்டும் பதிவு செய்து, stray vacancy பிரிவில் இணையலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: All you need to know about the new neet counselling process of mcc

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com