/indian-express-tamil/media/media_files/jTuL404lN2sfIZHjzpii.jpg)
அமேசான் வேலைவாய்ப்பு
பிரபல அமேசான் ஐ.டி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் சென்னை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகம், க்ளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் (ஓ.டி.டி), ஏ.ஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமேசான் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் அமேசான் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனத்தில் டிவைஸ் அசோசியேட் (Device Associate) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குவாலிட்டி சர்வீசஸ் (Quality Services) ரீடர்ஸ் ஆப்ரேட்டர்ஸ் (Reader Ops) பிரிவில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். க்யூ.ஏ (QA) மெத்தோடோலஜி அண்ட் டூல்ஸ் (Methodology and Tools) தெரிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டெஸ்ட்டிங் அனுபவம் இருக்க வேண்டும். அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு தேர்வாகுபவர்கள் டெஸ்ட்டிங் சாப்ட்வேருக்கு தேவையான எக்ஸிக்கியூட் டெஸ்ட் கேசஸ் கொடுப்பது, அதில் உள்ள பிழைகளை திருத்துவது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டி இருக்கும்.
தற்போதைய அறிவிப்பில் இந்த பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை, சம்பள விவரங்கள், கொடுக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால், முன்கூட்டியே விண்ணப்பம் செய்துக் கொள்வது சிறந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.