scorecardresearch

TANCET 2023: தேர்வு தேதி வெளியீடு; பிப்.2 முதல் விண்ணப்பிக்கலாம்!

எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம்.இ/ எம்.டெக்/ எம்.ஆர்க்/ எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு; தகுதிகள் என்ன? தேர்வு தேதி, விண்ணப்பச் செயல்முறை எப்போது? முழுவிவரம் இங்கே

TANCET 2023: தேர்வு தேதி வெளியீடு; பிப்.2 முதல் விண்ணப்பிக்கலாம்!
டான்செட் 2023: தேர்வுத் தேதிகளை அறிவித்த அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம் (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

TANCET 2023: அண்ணா பல்கலைக்கழகம் MCA மற்றும் MBA படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) 2023 மற்றும் M.E, M.Tech, M.Arch, M.Plan ஆகியவற்றிற்கான CEETA 2023 தேர்வுகளுக்கான விண்ணப்பம் செயல்முறை மற்றும் தேர்வுத் தேதிகளை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் MCA மற்றும் MBA படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) தகுதிப்பெற்றிருக்க வேண்டும். அதேபோல், M.E, M.Tech, M.Arch, M.Plan ஆகிய படிப்புகளில் சேர CEETA என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த 2 தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இதையும் படியுங்கள்: பி.டெக் மாணவர் சேர்க்கை 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு..காரணம் என்ன? – அரசு ஆய்வு

தற்போது இந்தத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அண்ணாப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி MCA படிப்புக்கான TANCET தேர்வு வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி முற்பகலில் நடைபெறும். MBA படிப்புக்கான TANCET தேர்வு வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி பிற்பகலில் நடைபெறும்.

அதேநேரம், M.E, M.Tech, M.Arch, M.Plan ஆகிய படிப்புகளுக்கான CEETA நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி முற்பகலில் நடைபெறும். இதற்கான விண்ணப்பச் செயல்முறை வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் தொடங்கும்.

TANCET தேர்வு MTech படிப்புக்கான தகுதி அளவுகோல்கள்

TANCET MTech தேர்வு 2023க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் பட்டங்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

– பரிந்துரைக்கப்பட்டபடி குறைந்தபட்சம் 50 சதவீதத்துடன் (ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவுகளுக்கு 45 சதவீதம்) தொடர்புடைய பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது BE, BTech, BArch அல்லது BPharm பட்டம் அல்லது தேவைக்கேற்ப தொடர்புடைய அறிவியல் அல்லது கலைப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

— GATE தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களும் TANCET 2023 க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் மற்றும் அவர்கள் நுழைவுத் தேர்வை எழுதத் தேவையில்லை. இருப்பினும், கேட் இன்ஜினியர் சயின்ஸ் (எக்ஸ்.இ) மற்றும் லைஃப் சயின்ஸ் (எக்ஸ்.எல்) தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

TANCET 2023 தகுதி: எப்படி சரிபார்ப்பது?

TANCET 2023 விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், தகுதி வரம்புகளைச் சரிபார்க்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்.

படி 1: TANCET -ன் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

படி 2: “ME/ MTech/ M.Arch/ MPlan பட்டப்படிப்புகளுக்கான பாடவாரியான தகுதி” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: TANCET தகுதி 2023 PDF புதிய தாவலில் தோன்றும்.

படி 4: தகுதியைச் சரிபார்த்து, எதிர்கால குறிப்புக்காக PDF ஐப் பதிவிறக்கவும்.

தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல வளாகங்கள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் (பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்) மற்றும் சுயநிதி கல்லூரிகள் ஆகியவற்றில் வழங்கப்படும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம்.இ/எம்.டெக்/எம்.ஆர்க்/ எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் TANCET -ன் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Anna university announced dates and application deadline for tancet 2023 ceeta pg 2023 exams