தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு துவங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நேரடி தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த அட்டவணையை மாற்றி அமைத்து, ஜனவரி 20-ஆம் தேதிக்கு பிறகு தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்து இருந்த அட்டவணையை ரத்துசெய்து, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவதற்கு ஏதுவாக காலஅவகாசம் கொடுத்து, தற்போது புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு வருகிற ஜனவரி மாதம் 21-ஆம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பி.இ., பி.டெக்., பி.ஆர்க் மாணவர்களுக்கு ஜனவரி 21-ஆம் தேதி முதல் மார்ச் 2 வரை செமஸ்டர் தேர்வு நடைபெறுகிறது.
எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்., மாணவர்களுக்கு ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும்.
மேலும் அரியர் மாணவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் ஒரு செமஸ்டரில் குறைந்தபட்ச வருகைப் பதிவை வைத்தால் அவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு நாளில் ஹால் டிக்கெட் எடுத்துச் செல்வது முக்கியம். அட்டவணைப்படி மாணவர்கள் தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தேர்வு தொடர்பான எந்த புதுப்பிப்புகளையும் சரிபார்ப்பது மாணவர்களின் பொறுப்பாகும். அண்ணா பல்கலைக்கழக கால அட்டவணையை annauniv.edu என்ற இணையதளத்தில் ஆன்லைனில் காணலாம்.
மாணவர்கள் தேர்வு நாளன்று தேர்வு மையத்திற்கு அடையாள அட்டையுடன் தங்களின் ஹால் டிக்கெட்டை எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை கண்காணிப்பாளர் சரிபார்ப்பார். ஹால் டிக்கெட் இல்லாமல் எந்த மாணவர்களும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”