anna university latest news , anna university bifurcation
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதாவை தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.
Advertisment
இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தது. இதன் காரணமாக, தற்போது உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் எனவும், பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க அண்ணா பெயரில் பல்கலைக்கழகம் என இரண்டாக பிரிக்க பரிந்துரைகளை அளிக்க தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது.
தமிழகத்தில் உள்ள 13 உறுப்பு கல்லூரிகள், 500 -க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.
Advertisment
Advertisements
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்ட மசோதாவை அறிமுகம் செய்த அமைச்சர் அன்பழகன், நிர்வாக வசதி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்துது கிடைப்பதால், மாநில அரசின் 69% இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த பாதிப்பும் வராது என்று உயர்க்கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மாநில அரசிடம் உள்ள பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்கவும், அண்ணா பெயரை அகற்றவும் தமிழக அரசு முயற்சித்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் முன்னதாக குற்றம் சாட்டினர். சீர்மிகு அந்தஸ்து பெற்றால் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து தெளிவான அறிவிப்பு ஏதும் இதுவரை வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழக சட்டப்பேரவையின் குறுகிய கால கூட்டத்தொடர் செப்- 14 அன்று தொடங்கியது. கொரோனா பெருன்தொற்று காரணமாக சட்டப்பேரவை வளாகத்திற்குப் பதிலாக கலைவாணர் அரங்கில் இந்த கூட்டத்தொடர் நடைப்பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil