பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் குறைவாக இருந்தாலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்புள்ளது. எந்த கோர்ஸ், அட்மிஷன் எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளது. பொறியியல் படிக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரும், சி.இ.ஜி எனப்படும் இந்தக் கல்லூரியில் படிக்க ஆசைப்படுவர். இங்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிகஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் மைனிங் வரை பல்வேறு இன்ஜினியரிங் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தின் முதல் பொறியியல் கல்லூரியான இந்த சி.இ.ஜி கல்லூரியில் படிக்க வேண்டுமானால் 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். சில டாப் கோர்ஸ்களுக்கு பொதுப் பிரிவுக்கான கட் ஆஃப் 200 அல்லது 199 மதிப்பெண்களிலே முடிந்து விடும். அந்த அளவிற்கு இந்த கல்லூரிக்கு கடும் போட்டி இருக்கும்.
அதேநேரம், கட் ஆஃப் குறைவாக எடுத்திருந்தாலும், கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கலாம். இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் கட் ஆஃப் கம்மியாக இருந்தாலும் எந்த கோர்ஸ் படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? என்பது யு.கே.வி தமிழா என்ற யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
அதன்படி, கிண்டி பொறியியல் கல்லூரியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகள் உள்ளன. அவை எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்.சி எலக்ட்ரானிக் மீடியா இதற்கான கல்வி கட்டணமும் குறைவு தான்.
இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் தேவை.
எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். இந்த மூன்று பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
எம்.எஸ்.சி எலக்ட்ரானிக் மீடியா படிக்க 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். மொழிப்பாடங்கள் தவிர பிற பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.