அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் கல்லூரியின் டீன், பேராசிரியர் நடராஜன் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 52. நடராஜனுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
ஐ.ஐ.டி-மெட்ராஸில் முதுகலை பட்டதாரி பட்டம் பெற்ற நடராஜன், 1990 களில் வேலூர் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் பணியாற்றிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் சேர்ந்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் முனைவர் பட்டம் பெற்றார்.
பயோமாஸ் வாயுவாக்கம், பைரோலிசிஸ் (வெப்பச் சிதைவு), சூரிய பி.வி வடிவமைப்பு (ஒளிமின்னழுத்த ) , சூரிய வெப்ப - பி.வி அமைப்புகள், எரிசக்தி ஆற்றல் செயல்படுத்த ஏற்ற வகையிலான கட்டிடங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றார். .
சர்வதேச அளவில் புகழ்பெற்ற அறிவியல் நாளிதழ்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பல்வேறு அம்சங்கள் குறித்தும், தொழில்நுட்பம் குறித்து பல கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.