முடிவுக்கு வந்த இழுபறி: அண்ணா பல்கலை விடுதியை கொரோனா சிகிச்சைக்கு வழங்குவதில் உடன்பாடு

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவ விடுதியை ஜூன் 20ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சுற்றறிக்கை விடுத்தது.

அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை கொரோனா  சிகிச்சை மையமாக மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. இதுகுறித்து, விடுதி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கையில்,” சென்னை மாகராட்சி  கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் விடுதி கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்படுகிறது. அவசர தேவைகளுக்காக, உங்கள் விடுதி அறையை பயன்படும் சூழல் ஏற்பட்டால், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். நீங்கள் தங்கி இருக்கும் இடங்களில் இருந்து கல்லூரி வளாகத்திற்கு வரவழைத்து  உங்கள்  பொருள்களைக் காலி செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கையும் சென்னை மாநகராட்சி உங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும். நீங்கள் வரமுடியாத பட்சத்தில் உங்களின் பிரிதிநிதிகளிடம் சாவியைக் கொடுத்து விடலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ்,  சென்னையில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக் கட்டிடங்களை மே 2ம் தேதிக்குள் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவ விடுதியை ஜூன் 20ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சுற்றறிக்கை விடுத்தது.

இருப்பினும், ஊரடங்கு அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் தங்கள் உடமைகளை கல்லாரி விடுதியில் வைத்து விட்டு சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாகவும், அவர்களின் அனுமதியின்றி  விடுதி அறையை திறப்பது தர்ம சங்கடத்திற்கு வழிவகுக்கும் என்று பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இரு தரப்புக்கும் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், விருப்பப்படும் அனைத்து மாணவர்களையும் கல்லூரி வளாகத்திற்கு வர அனுமதித்து அவர்களின் பொருள்களைக் காலி செய்து எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்” என்ற பல்கலைக்கழகத்தின் கோரிக்கையை சென்னை மாகராட்சி ஏற்றுக் கொண்டதாக  டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்கனவே சுமார் 600 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. அதனை, படுக்கை வசதிகளை 2000 ஆக அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றால் வரும் ஜூன் 31 ம் தேதி வரை பொது முடக்கநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய வாகனங்கள் தவிர பிற வாகனங்களுக்கு சென்னை பெருநகர பகுதியில் தடை  விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close