/indian-express-tamil/media/media_files/2024/12/28/wxANSYhMuEjihjZm5nrx.jpg)
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் திட்ட உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 04.09.2025
Project Associate – I
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E / B.Tech in Mechanical/ Manufacturing/ Production Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000
Project Associate – II
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: M.E / M.Tech in Design/ Product Design & Development Manufacturing/ Thermal Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/Recruitment_Project_Associate_I_II_AUCADCAM.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட அஞ்சல் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி: The Director, AU FRG Institute for CAD/ CAM, Anna University, CEG Campus, Chennai - 600025
மின்னஞ்சல் முகவரி: aufrgicc@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.09.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.