அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலாளர், நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலாளர், நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ss

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலாளர், நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர், மேலாளர், நிர்வாகி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2025

Advertisment

Startup Ecosystem Strategy Officer (Project Scientist)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.E./ M.Tech. படித்திருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 60,000

Program Coordinator (Project Associate I)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E./ B.Tech. / M.Sc./ M.C.A./ M.B.A./ M.Com படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 35,000

Startup Analyst / Manager (Project Associate II)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: M.E./ M.Tech. படித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 60,000

Accounts Executive (Project Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: B.B.A. / B.Com படித்திருக்க வேண்டும். மேலும் 6 மாதங்கள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.auced.com/recruitment/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Director, Centre for Entrepreneurship Development, #302, Platinum Jubilee Building, 2nd Floor, AC Tech campus, Anna University, Chennai - 600025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

Anna University Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: