அண்ணா பல்கலைக்கழகம் 6 மாத இலவச ஏ.சி பயிற்சி – விண்ணப்பம் செய்வது எப்படி ?

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் திங்கள் முதல் வெள்ளி வரை வகுப்புள் நடைபெறும். வகுப்புக்கான நேரம், மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை.

By: Updated: November 16, 2019, 03:32:45 PM

கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் செயல்பாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் (சி.இ.டி.), தமிழகத்தில் மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக , தற்போது ஏழை  மாணவர்களுக்கு  ஆறு மாதம் காலம் ஏ.சி மற்றும் பிரிட்ஜ் ரிப்பேர் சர்விஸ் தொழிநுட்ப படிப்புகளுக்கு இலவச படிப்பு கொடுக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த படிப்பை படிக்க விரும்பும் பயனர்கள், குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 60 இந்த இலவச படிப்புக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். வரும் நவம்பர் 22ம் தேதிக்குள் இந்த படிப்புகளுக்கு  மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

படிப்பு காலம் – 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கும் இந்த படிப்பு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் திங்கள் முதல் வெள்ளி வரை வகுப்புள் நடைபெறும். வகுப்புக்கான நேரம், மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை.

இது குறித்த உங்கல் கேள்விகளை dir_ced@annauniv.edu என்ற இமெயில் முகவரியிலும், 2235 8601 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Anna university conducts six month free ac mechanic course for poor students

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X