பொறியியல் படிப்புகளில் அரியர்கள் வைத்து முடிக்க முடியாதவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுவாய்ப்பை வழங்கியுள்ளது.
பொறியியல் படிப்புகளில் அரியர்கள் வைத்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு தொடர்பான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: JEE மெயின் தேர்வு 2023: முக்கியமான தலைப்புகள் என்ன? தேர்வுக்கு தயாராவது எப்படி?
அதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேலாக அரியர் வைத்திருப்பவர் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வோடு சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
2001-2002 ஆம் கல்வியாண்டில் 3 ஆவது செமஸ்டரிலிருந்தும், 2002-2003 ஆம் கல்வியாண்டில் முதல் செமஸ்டரிலிருந்தும் அரியர் வைத்தவர்கள் சிறப்புத் தேர்வை எழுதலாம்.
இந்த சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.coe1.annauniv.edu/ என்ற இணையதளத்தில் நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதேநேரம், இந்த சிறப்புத் தேர்வை எழுத விரும்புபவர்கள் தேர்வு கட்டணத்துடன் ரூ. 5000 கூடுதலாக செலுத்த வேண்டும். இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil