Advertisment

பொறியியல் செமஸ்டர் தேர்வில் எளிமையான கேள்விகள்: அண்ணா பல்கலை துணைவேந்தர் உறுதி

Anna university confirms Engineering semester exam questions could simple manner: நேரடி செமஸ்டர் தேர்வு; எளிமையான வினாக்கள் கேட்கப்படும் – அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anna University important circular, Anna University, Anti Ragging, ராகிங் செய்யமாட்டேன் மாணவர்களிடம் பிரமாணப் பத்திரம் கேட்கும் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், anti ragging circular, anna university ask declaration statement at students on ragging

பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளில் எளிமையான வினாக்கள் கேட்கப்படும் என்று அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் செமஸ்டர் தேர்வுகளும் நேரடி முறையில் நடத்தப்படும் என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பல்வேறு இடங்களில் ஆன்லைன் தேர்வு கோரி போராட்டம் நடத்தினர். இருப்பினும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை உறுதியாக தெரிவித்தது.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் 21-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவித்ததோடு, அதற்கான விரிவான அட்டவணையையும் வெளியிட்டது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் நேற்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜிடம், தேர்வு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பதிலளித்த துணைவேந்தர், நேரடி முறையில் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் அவகாசம் கேட்டு இருந்த நிலையில், உயர்கல்வித்துறை ஜனவரி மாதம் தேர்வு நடத்த கூறியிருந்தது. மாணவர்கள் நேரடி தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆன்லைன் வகுப்புகளில் நடத்தப்பட்ட பாடங்கள் அனைத்தும் தற்போது நேரடி வகுப்புகளில் நடத்தப்பட்டு, தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.

பாடத்திட்டங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது. ஆனால் தேர்வில் எளிமையான முறையில் மாணவர்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். கொரோனா பாதிப்பு அச்சம் இருக்கும் நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, நேரடி தேர்வு சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தப்பட உள்ளது. என்று அவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Semester Anna University Engineering
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment