Advertisment

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கே இந்த நிலையா ?

கடைக் கோடி கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஆரம்பிக்கப்படது பல்கலைக்கழக உறுப்பு  கல்லூரி .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anna university constituent college seat vacancies

சமிபத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அதிகாமான இடங்கள் நிரப்படமால் இருக்கின்றது என்ற செய்தியை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால், இந்த நிலை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளையும் விட்டு வைக்க வில்லை என்பதே நிதர்சமான உண்மை.

Advertisment

தமிழக அரசாங்கம் இதுவரையில் பதினாறு அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்  கல்லூரிகளை துவங்கியிருக்கிறது. அதாவது, இந்த கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழக நிர்வகித்து வருகிறது.

இந்த 16 கல்லூரிகளில், சமீபத்தில் முடிவடைந்த பொறியியல் கவுன்சிலிங்கில் 90 சதவீத அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை  வெறும் ஐந்து கல்லூரிகளால் மட்டுமே நிரப்ப முடிந்துள்ளது.

கோயம்பத்தூர் அண்ணா பல்கலைக்கழக  உறுப்பு   கல்லூரி மட்டுமே 100 சதவீதம் இடங்களை நிரப்பியுள்ளது.  திருச்சி,மதுரை, காஞ்சிபுரம்,விழுப்புரம் போன்ற கல்லூரிகளில் முறையே 98.85%, 97.91%, 96.66%, 95.83% நிரப்பப்பட்டுள்ளன.

மீதமுள்ள பத்து கல்லூரிகள் மாணவர்களை ஈர்க்க தவறியுள்ளன. உதரணமாக, ராமநாதபுர அண்ணா பல்கலைக்கழக  உறுப்புக் கல்லூரியில் மொத்தமுள்ள 300 இடங்களில் 227 இடங்கள் காலியிடமாகவே உள்ளது.

பொறியியல் படிப்பிற்க்கான ஆர்வம் குறைந்துள்ளதால் ஏற்ப்பட்ட வெற்றிடமா?  அல்லது  இந்த குறிப்பிட்ட கல்லுரிகளில் போதுமான அளவிற்கு உள்கட்டமைப்பு இல்லாமல் ஏற்ப்பட்ட வெற்றிடமா? என்பதை நாம் சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

கடைக் கோடி கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட  அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி இன்று தனக்கான அடையாளங்களை இழந்துள்ளது என்றே கூறலாம்.

Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment