12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அடுத்து அவர்கள் எதிர்நோக்கும் கல்லூரி படிப்புக்காக தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரி குறித்து பார்க்கலாம். தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்பிற்கு அண்ணா பல்கலைக்கழகம் டாப் கல்லூரி ஆக உள்ளது. இதில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.இ.ஜி (CEG) வளாகத்தில் உள்ள பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு துறைக்குமான கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு எதிர்பாக்க கூடிய கட் ஆஃப் மதிப்பெண் குறித்து பார்க்கலாம். பலருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்று விரும்பமாக இருக்கும். அந்த வகையில் இந்தாண்டு எதிர்பாக்க கூடிய கட் ஆஃப் மதிப்பெண் குறித்து பார்க்கலாம். இந்தாண்டு ஒட்டுமொத்தமாக (-5) மதிப்பெண் வரை கட் ஆஃப் மதிப்பெண் குறையலாம் எனக் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 1 முதல் 1.5 வரை குறையலாம் எனக் கூறப்படுகிறது.
Advertisment
அண்ணா பல்கலைக்கழகம் சி.இ.ஜி வளாகத்தில் 19 பாடப்பிரிவுகள் உள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ, ஐ.டி, உள்பட 19 பாடப்பிரிவுகள் உள்ளன. கடந்த காலங்களில் இங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ, ஐ.டி, இ.இ.இ, பயோ மெடிக்கல், மெக்கானிக்கல்,சிவில் என்ற அடிப்படையில் மாணவர்கள் துறைகளை தேர்வு செய்கின்றனர்.
கட் ஆஃப் மதிப்பெண் சமூகம் (வகுப்பு) வாரியாக மாறுபடும். அந்த வகையில் ஓ.சி, பி.சி, பி.சி.எம். எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.சி.ஏ வகுப்பின் அடிப்படையில் சீட் வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ துறைகளில் கடந்தாண்டு 200 மதிப்பெண் பெற்றிருந்ததால் சீட் கிடைத்தது. இந்தாண்டு 1 முதல் 1.5 வரை கட் ஆப் குறைந்து 198.5 மதிப்பெண் இருந்தாலே சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று கல்வி வழிகாட்டி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
இன்பர்மேசன் டெக்னாலஜி ஓ.சி, பி.சி வகுப்பிற்கு கடந்தாண்டு 199, பி.சி.எம். எம்.பி.சி மாணவர்களுக்கு முறையே 198,197, எஸ்.சி, எஸ்.சி.ஏ வகுப்பிற்கு 192, 188 கட் ஆப் மதிப்பெண்களுக்கு சீட் வழங்கப்பட்டது. இ.சி.இ படிப்பிலும் 199 டாப் கட் ஆஃப் மதிப்பெண்ணாக இருந்தது.
இ.இ.இ பொறுத்தவரை ஓ.சி, பி.சி வகுப்பிற்கு 198,197, பி.சி.எம். எம்.பி.சிக்கு 195, 196, எஸ்.சி 190, எஸ்.சி.ஏ 182. இந்தாண்டு 196, 196,5 கட் ஆப் மதிப்பெண்களுக்கே இ.இ.இ சீட் பெற வாய்ப்பு உள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பொறுத்தவரை கடந்தாண்டு 196 டாப் கட் ஆப் ஆக இருந்தது. இது இந்தாண்டு 1 முதல் 1.5 வரை குறைய வாய்ப்புள்ளது.
அரசு வேலை வேண்டும் என நினைப்பவர்கள் சிவில் இன்ஜியிரிங் படிக்கலாம். சிவில் பொறுத்தவரையில் கடந்தாண்டு 194 டாப் கட் ஆப் மதிப்பெண்ணாக இருந்தது. பி.சி 192, பி.சி.எம். எம்.பி.சி 187, 189, எஸ்.சி 184, , எஸ்.சி.ஏ 174 ஆக இருந்தது. ஜியோ இன்வெர்மேடிக்கஸ் துறைக்கும் வாய்ப்புகள் உள்ளன. 193 டாப் கட் ஆப் ஆக இருந்துள்ளது. இஸ்ரோ, ஐ.எஸ்.ஆர் விண்வெளி சம்பந்தமாக ஆய்வு செய்யும் நிறுவனங்களில் பணி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மைனிங் இன்ஜியிரிங் அதிகபட்சமாக 190 கட் ஆப், எஸ்.சி.ஏ மாணவர்களுக்கு 160 இருந்தால் சீட் கிடைத்தது.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (தமிழ் வழி கல்வி) மாணவர்களுக்கு 186 கட் ஆஃப் மதிப்பெண் இருந்தால் கடந்தாண்டு சீட் கொடுக்கப்பட்டது. இதில் எஸ்.சி, எஸ்.சிஏ மாணவர்களுக்கு முறையே 170, 138 கட் ஆப் இருந்தால் சீட் வழங்கப்பட்டது. அடுத்ததாக சிவில் இன்ஜினியரிங் (தமிழ் வழி கல்வி) மாணவர்களுக்கு 181 கட் ஆஃப் மதிப்பெண் கடந்தாண்டு வழங்கப்பட்டது. இதில் எஸ்.சி.ஏ பிரிவு மாணவர்களுக்கு 103 கட் ஆஃப் மதிப்பெண் இருந்தாலே வழங்கப்பட்டது. அதிலும் தமிழ் மீடியம் சிவில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலையில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil