Advertisment

TNEA Rank List 2019: அண்ணா பல்கலைக்கழகம் தர வரிசைப் பட்டியல்- அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்

tnea 2019 rank list: ரேங்கிங் பட்டியலில் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் இருப்பின் 044 – 22351014 மற்றும் 044 – 22351015 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnea rank list 2019, anna university rank list 2019, அண்ணா பல்கலைக்கழகம் ரேங்க் பட்டியல்

tnea rank list 2019, anna university rank list 2019, அண்ணா பல்கலைக்கழகம் ரேங்க் பட்டியல்

Anna university rank list 2019 released at www.tneaonline.in: தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.72 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இன்று(ஜூன் 20) தரவரிசை பட்டியலை, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார்.

Advertisment

ரேங்கிங் பட்டியலை, மாணவர்கள் www.tneaonline.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.

tnea rank list 2019, anna university rank list 2019, அண்ணா பல்கலைக்கழகம் ரேங்க் பட்டியல் Anna university rank list 2019: அண்ணா பல்கலைக்கழகம் ரேங்க் பட்டியல்

Anna university engineering rank list: அண்ணா பல்கலைக்கழகம் தர வரிசைப் பட்டியல்

ரேங்கிங் பட்டியல் வெளியிட்டபிறகு, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பழகன் கூறியதாவது, மாணவர்கள் இந்த ரேங்கிங் பட்டியலை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக இணையதளத்தில், வரும் 24ம் தேதி வரை காணலாம். ரேங்கிங் பட்டியலில் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் இருப்பின் 044 - 22351014 மற்றும் 044 - 22351015 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைகழகத்தின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக உயர் கல்வி துறையின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. மொத்தம், 1.33 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், 1.04 லட்சம் பேர் மட்டும், அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்பட்டது.

மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், ஒட்டுமொத்த தரவரிசையும், ஜாதி வாரி தர வரிசையும், இந்த பட்டியலில் இடம்பெறும். கவுன்சிலிங் நடவடிக்கைகள், வரும், 25ம் தேதி துவங்குகின்றன. பொது பாட பிரிவு மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கவுன்சிலிங், ஜூலை, 3 முதல், 30 வரை, 'ஆன்லைன்' வழியே நடத்தப்பட உள்ளது.

Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment