அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் ஊக்கப்படுத்துதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கல்விப் பாடப்பிரிவு மையம், தன்னாட்சி இல்லாத இணைப்புக் கல்லூரிகளுக்கு முதல் செமஸ்டர் (செப்டம்பர் 2023 முதல் ஜனவரி 2024 வரை) செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னை மற்றும் கோவையில் உள்ள கல்லூரிகள் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் ஊக்கப்படுத்துதல் நிகழ்வுகளுடன் வகுப்புகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளன. யோகா, ஆளுமை மேம்பாடு, உலகளாவிய மனித விழுமியங்கள், ஊக்கமளிக்கும் பேச்சு, தகவல் தொடர்புத் திறன்கள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் குறித்த அமர்வுகளுடன் ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த பல்கலைக்கழகத்திலிருந்து கல்லூரிகள் அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளன.
முதல் செமஸ்டருக்கான கடைசி வேலை நாள் ஜனவரி 4, 2024 ஆகும். செய்முறைத் தேர்வு ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கும் மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கும். தியரி மற்றும் செய்முறை தேர்வு அட்டவணைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவதன் மூலம் கல்லூரியின் பல்வேறு இணை பாடத்திட்ட செயல்பாடுகளால் ஏற்படும் வகுப்புகள் இழப்பு சரி செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முதல் செமஸ்டரில் உள்ள ஏழு சனிக்கிழமைகளும் வேலை நாட்களாகும்: செப்டம்பர் 30, அக்டோபர் 14 மற்றும் 28, நவம்பர் 4 மற்றும் 25 மற்றும் டிசம்பர் 9 மற்றும் 23.
M.E/ M.Tech/ M.Arch (FT), M.BA. (முழுநேரம் மற்றும் பகுதிநேரம்) மற்றும் எம்.பி.ஏ ஐந்தாண்டு ஒருங்கிணைந்த திட்டங்கள், வகுப்புகள் செப்டம்பர் 11 அன்று தொடங்கும். கடைசி வேலை நாள் டிசம்பர் 30. செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 5, 2024 அன்று தொடங்கி, செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 22ல் முடிவடையும்.
தன்னாட்சிக் கல்லூரிகள் ஏற்கனவே முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஊக்கப்படுத்துதல் நிகழ்வுகளை தொடங்கியுள்ளன. 15 நாட்கள் நடைபெறும் ஊக்கப்படுத்துதல் நிகழ்வுகளில் மென் திறன் பயிற்சிக்காக 15 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கேட் தேர்வுக்கான பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டுதலும் வழங்கப்பட உள்ளது.
மூன்றாவது செமஸ்டர் வகுப்புகள் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இரண்டாம் செமஸ்டர் செப்டம்பர் 8 ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-21 கல்வி அமர்வு டிசம்பரில் தொடங்கியதால், அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வியாண்டை படிப்படியாக முன்னேற்றுவதற்காக விடுமுறை நாட்களையும் சனிக்கிழமைகளையும் அண்ணா பல்கலைக்கழகம் பயன்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“