தமிழகத்தில் செயல்படும் 89 கல்லூரிகள் தரமற்றது என அண்ணா பல்கலைக்கழகம் வகைபடுத்தியதாக வரும் தகவல்களை அண்ணா பல்கலைக்கழகம் முற்றிலும் மறுத்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கும் 89 கல்லூரிகள் தரமற்றவை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததாக சமூக வலைதங்களில் பொய்யான தகவல்கள் பரவி வந்தன.
இந்த தகவலை முற்றிலும் மறுத்த அண்ணா பல்கலைக்கழகம்," தனியார் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் எதையும் தரமானது, தரமற்றது என வகை படுத்தவில்லை என்று தெரிவித்தது.
தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார் . ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒரே நாளில் ஜேஇஇ, யுபிஎஸ்சி தேர்வுகள்: விண்ணப்பப் படிவத்தில் மாற்றம் செய்ய அனுமதி
மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் பொறியியல் கவுன்சிலிங் நடைமுறைக்கு தயாராகி வரும் நிலையில், இப்படி ஒரு பொய்த் தகவல் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil