அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் கட்ட மறுமதிப்பீடு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் இளநிலை, முதுநிலை மற்றும் பி.ஹெச்.டி உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் கட்ட மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்.டி படிப்புகளுக்கு ஏப்ரல்/ மே 2024 இரண்டாம் கட்ட தேர்வு (Anna University Phase II Revaluation Result) நடைபெற்றது. அதற்கான மறுமதிப்பீடு முடிவுகள் தற்போது https://coe1.annauniv.edu/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்கள் மூலம் மறுமதிப்பீட்டு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
மறுமதிப்பீட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளுவது எப்படி?
படி 1: https://coe1.annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
படி 2: மாணவர்களின் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் கேப்சா-வை உள்ளிட வேண்டும்.
படி 3: அதனைத்தொடர்ந்து காண்பிக்கப்படும் புதிய திரையில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
படி 4: எதிர்கால குறிப்புக்காக முடிவுகளை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“