2022 ஆம் ஆண்டு, ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதனால் கல்லூரி மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும், தேர்வின் முடிவுகளை www.annauniv.edu, www.aucoe.annauniv.edu ஆகிய இணையதளங்களின் மூலம் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள வலைத்தளங்களுக்குள் சென்றவுடன், 'பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள்' அறிவிப்பின் இணைப்பைக் கிளிக் செய்து, மாணவரின் பதிவு எண்ணை கொடுக்கவேண்டும்.
அதன்பிறகு, தேர்வின் முடிவுகள் PDF வடிவத்தில் வலைத்தளத்தில் காண்பிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil