அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு அட்டவணை, ஹால் டிக்கெட்: முழு விவரம் இங்கே

Anna University News: கூடுதல் தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான annauniv.edu -ல் காணலாம்.

By: November 4, 2019, 8:34:11 PM

Anna University Exam Time Table: அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் தொடர்பான தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு தொடர்பான விவரங்கள் இவை!

சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு, நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இளங்கலை மற்றும் முதுகலை இஞ்ஜினியரிங் மாணவர்களுக்கான நவம்பர் / டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. CEG வளாகத்தில் நடைபெறும் இளங்கலை இஞ்ஜினியரிங் பிரிவு மாணவர்களுக்கான துணைத்தேர்வு மற்றும் AC TECH வளாகத்தில் நடைபெறும் இளங்கலை இஞ்ஜினியரிங் பிரிவு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் / டிசம்பர் 2019 (UG, PG)
செய்முறை மற்றும் எழுத்துத்தேர்வு – அக்டோபர் 21, 2019 முதல் டிசம்பர் 10, 2019 வரை

மாணவர்கள் தேர்வு அட்டவணை குறித்த கூடுதல் தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான annauniv.edu -ல் காணலாம்.

Anna University Arrear Hall Tickets 2019: அண்ணா பல்கலைக்கழகம் ஹால் டிக்கெட்

அண்ணா பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை அரியர் தேர்வுக்கான தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடைபெறுகிறது. அனைத்து தேர்வர்களும் ஹால் டிக்கெட்டை அதிகாரப்பூர்வ வலைத்தளம் coe1.annauniv.edu அல்லது acoe.annauniv.edu மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

அண்ணா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட முறைகளை பின்பற்றவும்.

ஸ்டெப் 1: அண்ணா பல்கலைக்கழகத்திற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் (coe1.annauniv.edu அல்லது acoe.annauniv.edu)

ஸ்டெப் 2: ஹோம் பேஜில், அப்டேட் லிங்க்களுக்கு கீழ் Flash ஆகும் அட்மிட் கார்டு இணைப்பைக் கிளிக் செய்க

ஸ்டெப் 3: உங்கள் user id மற்றும் password-ஐ டைப் செய்து login கிளிக் செய்க

ஸ்டெப் 4: ஹால் டிக்கெட் நகலைப் பதிவிறக்கி, எதிர்கால தேவைகளுக்காக பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளின் யுஜி / பிஜி தேர்வு நேர அட்டவணை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் கிடைக்கிறது. மாணவர்கள் அதில் தெரிந்து கொள்ளலாம்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Anna university exam time table anna university hall ticket download at annauniv edu in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X