இணையதளங்களில் வெளியான ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு உள்ளான கல்லூரிகளின் பட்டியல் போலியானது : அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

Anna University Latest News: அண்ணா பல்கலைக்கழகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைவுக்கல்லூரிகளில் இதுபோன்ற தரமற்ற கல்லூரிகள் / தரமான கல்லூரிகள் என்று பாகுபாடு செய்யவில்லை

By: Updated: July 2, 2019, 12:00:25 PM

ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு உள்ளான இஞ்ஜினியரிங் கல்லூரிகள் என்ற பெயரில் எவ்வித பட்டியலையும், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இஞ்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்காக, மாணவர் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது. பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது போன்று பயிற்றுவிக்கும் கல்லூரிகளின் தரம் அறிந்து அதில் சேர மாணவர்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணா பல்கலைகழகம் தரப்பில் வெளியிடப்பட்டதாக இணையதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு உள்ளான கல்லூரிகளின் பட்டியல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுப்பு : இந்த கல்லூரிகளின் பட்டியல் விவகாரத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் அளித்துள்ள விளக்கம்…

சமூகவலைதளங்களில், அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைவுக்கல்லூரிகளில் 89 கல்லூரிகள் தரமற்றது என்றும், அவற்றின் பெர், TNEA Code No. மற்றும் ஏனைய தகவல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைவுக்கல்லூரிகளில் இதுபோன்ற தரமற்ற கல்லூரிகள் / தரமான கல்லூரிகள் என்று பாகுபாடு செய்யவில்லை என்றும் 89 கல்லூரிகளின் பெயர் பட்டியல் குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Anna university explanation action facing engineering colleges list

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X