இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு பதிவு செய்த 93%-க்கும் அதிகமான மாணவர்கள் செப்டம்பர் 24 முதல் 29 வரை நடந்த ஆன்லைன் ப்ரொக்டரிங் தேர்வை முடித்தனர்.
கமல் லுக் முதல் கேம் டாஸ்க் வரை: பிக் பாஸில் நடந்த அதிரடி மாற்றம்!
தேர்வுகளுக்கு பதிவு செய்த 4,19,214 மாணவர்களில், 3,91,379 பேர் தங்கள் வீடுகளிலிருந்து தேர்வு எழுதினர். 10,574 மாணவர்கள் (2.5%) மட்டுமே லாக் இன் சிக்கல்களை எதிர்கொண்டனர், மீதமுள்ளவர்கள் தேர்வுகளுக்கு வரவில்லை.
பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களில் இன்னும் சிறந்த வருகை இருந்தது, 96% மாணவர்கள் ஆன்லைன் டெஸ்டுக்கு வந்தனர். இறுதி ஆண்டு மாணவர்களுக்கு முழு தானியங்கி தேர்வை தயார் செய்த ஒரே மாநில பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம் தான். மாணவர்கள் காகிதம் மற்றும் பேனாவைப் பயன்படுத்தாமல் தங்கள் வீடுகளில், தங்கள் வசதிக்கேற்ப தேர்வெழுத வழி செய்யப்பட்டிருந்தது.
கணினிகள் மூலம் மதிப்பீடு செய்யப்படுவதால், அடுத்த சில நாட்களில் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் தேர்வெழுத முடியாத மாணவர்களுக்கு மறுபரிசீலனை நடத்தப்போவதாகவும் பல்கலைக்கழகம் அறிவித்தது.
"தொற்றுநோய்களின் போது மாணவர்களை வரவழைக்காமல் பரீட்சைகளை நடத்த முடியும் என்பதை நாங்கள் வெற்றிகரமாக நிரூபித்துள்ளோம். மாணவர்களுக்கு டிஜிட்டல் இணைப்பு மட்டும் இதற்கு போதும். முன்னோக்கிச் செல்லும்போது, நாம் இதைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும்” என்றார் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா.
ஒரு மணிநேரம் நீண்ட ஆன்லைன் தேர்வில் மாறுபட்ட சிரம நிலைகளைக் கொண்ட பல கேள்விகள் மட்டுமே இருந்தன. ஆன்லைன் தேர்வுக்கான கேள்வித்தாள் பல்கலைக்கழக ஊழியர்களால் முன்னதாகவே தயாரிக்கப்பட்டது. இது எந்தவொரு பெரிய பிரச்சினையும் இல்லாமல் பரீட்சை வெற்றிகரமாக நடத்த பல்கலைக்கழகத்திற்கு உதவியது என்றார் துணைவேந்தர்.
முதல் நாள் தவிர, மாணவர்கள் மிகவும் சுமூகமாக தேர்வில் கலந்து கொண்டனர் என்று கல்லூரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. "1,200 மாணவர்களில், 99% பேர் தேர்வை முடித்துள்ளனர். முதல் நாள் தவிர, மற்ற நாட்களில் மாணவர்கள் தேர்வை மிகவும் சுமூகமாக முடித்தனர்" என்று சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் கே.மாறன் கூறினார். சில மாணவர்கள் முதல் நாளில் லாக்-இன் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
அரை நகர்புறங்களில் உள்ல கல்லூரிகளிலும் தேர்வுக்கு நல்ல வருகை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. "660 மாணவர்களில், முதல் நாளில் ஆறு பேருக்கு மட்டுமே லாக்-இன் சிக்கல்கள் இருந்தன. அந்த மாணவர்களுக்கு கூட, அடுத்த நாட்களில் பல்கலைக்கழகம் பிரச்சினைகளை சரிசெய்தது" என்று திருச்சியில் உள்ள சரநாதன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டி.வளவன் கூறினார்.
இது உண்மையாவே சூப்பர் ஐடியா… வாடிக்கையாளர்கள் சேவையில் ஒருபடி மேலே போன ஐசிஐசிஐ!
டெஸ்டுக்கு 30%, இறுதி செமஸ்டருக்கு 50%, 20% இண்டர்னல் என மதிப்பீடு வழங்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”