கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் இறுதி ஆண்டு பருவத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் தேர்வு குறித்த சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், "இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும். 40 அப்ஜெக்டிவ் கேள்விகளில் மாணவர்கள் 30 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள 5 யூனிட்டுகளில், 4 யூனிட்டுகளில் கவனம் செலுத்தினால் போதுமானது. மாணவர்களின் பயற்சிக்காக, மாதிரி ஆன்லைன் தேர்வு 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆன்லைன் தேர்வுக்கான கேமரா, மைக், லேப்டாப் உள்ளிட்டவற்றை மாணவர்கள் தயாராக வைத்திருப்பது மாணவர்களின் கடமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தை மாநில உயர்கல்வித் துறை கூட்டியது. இறுதி ஆண்டு பருவத் தேர்வுகளை ஆன்லைனில் மூலம் நடத்த ஒருமனதாக கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், தேர்வு முறைகள் – கேள்விகள் மற்றும் அதற்கான இணையதளங்களை உருவாக்கும் பணியை பல்கலைக்கழகங்களின் பொறுப்பில் விடப்பட்டன .
செப். 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இறுதி ஆண்டு மானவர்களுக்கனா தோ்வுகள் நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இருப்பினும், தேர்வு நடைபெறும் கால அளவு, தேர்வு முறை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் இறுதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் நடத்த வேண்டும் என்று யுஜிசி தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil