Advertisment

ஆன்லைன் தேர்வுகள்: வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவித்த மாணவர்கள்

இருப்பினும், அதிகப்படியான   மாணவர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
final year exam , anna university semester arrear Exam

பொறியியல் மற்றும் கலை அறிவியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisment

கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளை, இன்று முதல் வரும் 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழகம் இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் திறந்த புத்தக தேர்வு (Open Book Examination) முறையில் நடைபெற்றுவருகிறது. இருப்பினும், அதிகப்படியான   மாணவர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். பல மாணவர்களால்  வலைப்பக்கத்தில் உட்புகவே (Log in) முடிய வில்லை. ஸ்கேன் செய்த விடைத்தாளை பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்றும் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர்  தெரிவித்தனர்.

தொழில்நுட்டக் குளறுபுடுகளை அடையாளம் கண்டு வருவதாகவும், மாற்று வழிகளில் வினாத்தாளை மான்வர்களிடம் கொண்டு செல்லும் முயற்சிகள் குறித்து பரிசீலித்து வருகிறோம். வாட்ஸ்அப் போன்ற தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த இருக்கிறோம் என்று  சென்னை பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்கள் தங்கள் விடைத்தாளை கொரியர் மூலம் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னதாக, கடந்த 18ம் தேதி பொறியியல் மாணவர்களுக்கான அண்ணா பல்கலைக்கழக மாதிரித் தேர்வுகளில் ஏராளமான தொழில்நுட்பக் குளறுபடிகள் ஏற்பட்டன.

திமுக தலைவர் இதுகுறித்து முன்னதாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், " எந்த ஐயப்பாடும், குழப்பமுமின்றி  மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும். தேர்வு எழுத முடியாத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

1 மணி நேரம் நடக்கும் ஆன்லைன் தேர்வில்,  40 அப்ஜெக்டிவ் கேள்விகளில் மாணவர்கள் 30 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment