Advertisment

அண்ணா பல்கலை.யில் சேர ஆர்வம் காட்டும் வெளிநாட்டு மாணவர்கள்: விண்ணப்பங்கள் 6 மடங்கு அதிகரிப்பு

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நேபாளம், பூடான், பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மாணவர்களிடமிருந்து யுஜி மற்றும் பிஜி படிப்புகளுக்கு 1,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Anna University suspension to 80 engineering colleges, without granting continuous recognition, suspension of 80 engineering colleges without granting continuous recognition, Anna University, 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் நிறுத்திவைப்பு, அண்ணா பல்கலை. நடவடிக்கை, Anna University suspension to 80- engineering colleges

அண்ணா பல்கலைக்கழகத்தில் பெறப்பட்டுள்ள வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பம் 6 மடங்கு அதிகரித்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் க்யூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் 100 இடங்கள் முன்னேறியதைத் தொடர்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பம் 6 மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisment

புகழ்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்க வெளிநாட்டு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நேபாளம், பூடான், பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மாணவர்களிடமிருந்து யுஜி மற்றும் பிஜி படிப்புகளுக்கு 1,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

மேலும், அண்ணா பல்கலைக்கழகம் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) ஆகியவற்றில் 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்ப பதிவுகளைப் பெற்றது. 2023-ல், அண்ணா பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து 200 விண்ணப்ப பதிவுகளைப் பெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மைய இயக்குநர் பேராசிரியர் ஆர் பாஸ்கரன் கூறுகையில், “கணினி அறிவியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தவிர, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் மற்றும் உணவு தொழில்நுட்பம் ஆகியவை விருப்பமான படிப்புகளாக உள்ளன. எம்.சி.ஏ மற்றும் எம்.பி.ஏ படிப்பிலும் ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ல இந்த ஆர்வத்திற்கு, சிறந்த க்யூ.எஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை, கட்டண தள்ளுபடி மற்றும் பல்கலைக்கழகம் நடத்திய சேர்க்கை விளம்பரம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று பாஸ்கரன் கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் க்யூ.எஸ் உலகத் தரவரிசை 2023-ல் 550-ல் இருந்து 2024-ல் 427-க்கு முன்னேறியது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில், இந்த ஆண்டு 40 இடங்கள் முன்னேறி 249 ஆக உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், ஐடி மற்றும் இ.சி.இ தவிர மற்ற படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு 50% கட்டண சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாணவர்கள் ஆண்டுக்கு 7,500 அமெரிக்க டாலருக்கு பதிலாக 3,750 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும். குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் (LDCs) மற்றும் சிறிய தீவு வளரும் மாநிலங்களைச் (SIDS) சேர்ந்த மாணவர்களை வெளிநாட்டு மாணவர்களின் பிரிவின் கீழ் சேர்க்கையை அதிகரிக்க பல்கலைக்கழகம் இலக்கு வைத்துள்ளது.

வளைகுடா நாடுகளில் (CIWGC) உள்ள வெளிநாட்டு மாணவர்கள், என்.ஆர்.ஐ.க்கள் மற்றும் இந்தியத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அனைத்துக் கிளைகளிலும் பல்கலைக்கழகம் அதன் அனுமதிக்கப்பட்ட பலத்தில் 15% ஒதுக்கியுள்ளது, ஒவ்வொரு பிரிவினரும் 5% இடங்களைப் பெறுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஒதுக்கீட்டின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க முடியும் என்றாலும், க்யூ.எஸ் தரவரிசை தரவுகளின்படி, பல்கலைக்கழகத்தில் மொத்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆகும்.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கு மே 31-ம் தேதி கடைசி தேதியாகும். அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும். எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பொது சுகாதார பொறியியல் குறித்த இரட்டைப் பட்டப்படிப்பை விரைவில் தொடங்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

“மாணவர்கள் முதல் இரண்டு ஆண்டுகளை அண்ணா பல்கலைக்கழகத்திலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்திலும் படிப்பார். உயிர் மருத்துவ பொறியியல், பயோடெக்னாலஜி மற்றும் மருத்துவ இயற்பியல் ஆகியவற்றில் இந்த மாணவர்களை மாற்றிக்கொள்ளும் திட்டம் வழங்கப்படும்,” என்று பேராசிரியர் பாஸ்கரன் கூறினார். பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் படித்த மாணவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment