தமிழக அரசாங்கம் இதுவரையில் பதினாறு அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை துவங்கியிருக்கிறது. அதாவது, இந்த கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழக நிர்வகித்து வருகிறது.
இந்த 16 கல்லூரிகளில், சமீபத்தில் முடிவடைந்த பொறியியல் கவுன்சிலிங்கில் 90 சதவீத அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை வெறும் ஐந்து கல்லூரிகளால் மட்டுமே நிரப்ப முடிந்தது என்ற செய்தி நம் அனைவரையும் யோசிக்க வைத்தது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் தனது 16 தொகுதி கல்லூரிகள் மற்றும் பிராந்திய வளாகங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மாநில அரசிடமிருந்து ரூ.40 கோடியைப் பெற்றுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் "பல்கலைக்கழகம் ரூ .100 கோடியைக் கோரியது, ஆனால் தற்போது ரூ .40 கோடி மட்டுமே கிடைத்தது. ஆய்வகங்களை மேம்படுத்துதல், பெண்களுக்கான தாங்கும் விடுதிகளை உருவாக்குதல் மற்றும் உபகரணங்கள் வாங்குவதல் போன்றவைகளுக்காக இந்த பணம் செலவிடவுள்ளது" என்று தெரிவித்தார் .
பெரும்பாலான, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரகளில் உள்க்கட்டமைப்பு ஆய்வகங்கள் சரியில்லாத நிலையில் உள்ளது. அந்தந்த உறுப்புக் கல்லூரிகளின் தேவை அறிந்து கொண்டு, முன்னுரிமைத் தேவைகளை பட்டியலிட்டு செலவு செய்தால் உறுப்புக் கல்லூரிகளும் தனக்கான இடங்களை அடையும்.