தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகள் மற்றும் கட்டிடக்கலை, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை வழங்கும் தனி நிறுவனங்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குறைபாடுகளை 2 வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் அங்கீகாரம் வழங்கப்படும். மேலும் இதுதொடர்பாக உரிய விளக்கமளிக்காவிட்டால், அங்கீகார நீட்டிப்பும், மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது என்றும் பல்லலைக்கழகம் எச்சரித்துள்ளது.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மே மற்றும் ஜூன் மாதங்களில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இணைப்பு நீட்டிப்பு கோரும் 476 கல்லூரிகளில், பல்கலைக்கழகம் நேரில் ஆய்வு செய்தது.
அதில், 225 கல்லூரிகளில் குறைந்தது ஒரு திட்டத்திலாவது 50%க்கும் அதிகமான குறைபாடுகள் இருப்பதை கமிட்டி கண்டறிந்தது. பெரும்பாலான கல்லூரிகள் தேவையானதை விட மிகக் குறைவான ஆசிரியர்களைக் கொண்டிருந்தனர், சில கல்லூரிகளில் ஆய்வக வசதிகள் இல்லை" என்று துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறினார்.
62 கல்லூரிகளில் 25% முதல் 50% வரை உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளது, மேலும் 23 முதல்வர்கள் விதிமுறைகளின்படி தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. தகுதியற்ற நபர்களை முதல்வராக உள்ள கல்லூரிகளுக்கு விதிமுறைகளின்படி புதிய முதல்வர்களை நியமிக்க வேண்டும். 50%க்கும் குறைவான முரண்பாடுகள் உள்ள கல்லூரிகளும், இணக்க அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், என்று அவர் மேலும் கூறியதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.
அதேநேரம் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களில் 25%க்கும் குறைவான இடைவெளியுடன் கண்டறியப்பட்ட 166 கல்லூரிகளுக்கு இணைப்பு நீட்டிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய்களின் போது சில கல்லூரிகள் ஆசிரிய பலத்தைக் குறைத்ததாகவும், பலர் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்றும் ஆய்வுக் குழுக்களின் ஒரு பகுதியாக இருந்த பேராசிரியர்கள் கூறினர்.
பல்கலைக்கழகம்’ கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட ஷோகாஸ் நோட்டீஸைப் பின்தொடர்ந்து, படிப்பை நீக்குவது அல்லது பட்டப்படிப்பு திட்டங்களை வழங்க தேவையான உள்கட்டமைப்பு இல்லாத கல்லூரியை நீக்குவது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறினார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை நீடிக்கிறது. கடந்த காலங்களில் இந்தக் கல்லூரிகளுக்கு எதிராக பல்கலைக்கழகம் செயல்பட்டிருந்தால், இந்தக் கல்லூரிகள் தங்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்திருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“