சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி சில பேராசிரியர்கள் பணியில் இருந்ததுபோல் முறைகேடு செய்தது வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த விவகாரத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ், இந்த விவகாரத்தில் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “பேராசிரியர்கள் பணி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள், அண்ணா பல்கலை.யின் உறுப்பு கல்லூரிகளில் பணியாற்ற முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “பேராசிரியர்கள் பணி முறைகேடு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“