Anna University introduce 40 new elective papers in Engineering syllabus: அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 40 புதிய விருப்ப பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இனி விரும்பிய பாடங்களை தங்களின் விருப்ப பாடமாக எடுத்துப் படிக்கலாம்.
Advertisment
பொறியியல் படிக்கும் அனைவரும் தங்களின் 3 மற்றும் 4 ஆவது ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பாடங்களைத் தவிர, விருப்பப் பாடங்களாக சிலவற்றைத் தேர்வு செய்து படிக்கலாம். தங்கள் எதிர்கால வேலைவாய்ப்பு, தங்களின் விருப்பம், விரும்பிய துறை, தனித் திறமையை வளர்க்க, கூடுதல் திறனைப் பெற என இந்த விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம்.
இப்படியான விருப்ப பாடங்களின் பட்டியலை, ஓவ்வொரு பாடப்பிரிவு மற்றும் செமஸ்ருடருக்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழகம் அதன் பாடத்திட்டத்தில் வழங்கும். அதில் விருப்பமானதை மாணவர்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம்.
இந்த நிலையில், மாணவர்களின் விருப்பம் மற்றும் தேவை, தொழில் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களின் தேவை அடிப்படையில் 40 புதிய விருப்ப பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என கல்வியாளர் ரமேஷ் பிரபா தெரிவித்துள்ளார்.
இவற்றில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தரவு ஆய்வு, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் உள்ளிட்ட பாடங்களை விருப்ப பாடங்களாக வழங்குகிறது. அதேநேரம் இந்தப் பாடங்களின் தேவை கருதி, கட்டாய பாடங்களாக வழங்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதேபோல் இறுதியாண்டில் 6 மாத தொழிற்பயிற்சி வழங்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருவதாக ரமேஷ்பிரபா தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil