scorecardresearch

நிறைய பணியிடம் இருக்கு… இந்த கோர்ஸ் படித்தால் அரசு வேலை கன்ஃபார்ம்?

Educational News: அண்ணா பல்கலைக்கழகம் 100 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் ஒரு படிப்பை அறிமுகம் செய்ய உள்ளது.

நிறைய பணியிடம் இருக்கு… இந்த கோர்ஸ் படித்தால் அரசு வேலை கன்ஃபார்ம்?
Anna University

Tamil Nadu News: நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது குதிரைக் கொம்பாக உள்ளது. ஏராளமான படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்பிரச்சனைகளுக்கான ஒரு தீர்வை தேடுவதற்காக அரசு ஒரு ஆய்வு மேற்கொண்டது. 

இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் மூன்று லட்சம் வடிவமைப்பாளர்கள் எல்லாத்துறைகளிலும் தேவைப்படுவார்கள் என்று தெரியவந்தது. அதற்கு ஏற்ப ஆண்டுக்கு எட்டு ஆயிரம் பட்டதாரிகளை அத்துறையில் தேர்ச்சி பெற்று உருவாக வேண்டும். அதனை கொண்டுவருவதற்காக புதிய படிப்புகளை தொடங்க உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.

வருங்கால மாணவர்களுக்காக புதிதாக கொண்டுவரப்பட்ட இந்த துறை திட்டமிடல் பட்டமாகும் (Planning). இளநிலை திட்டமிடல் பட்டம் (Bachelor of Planning) படிப்பில் 6 ஆயிரம் மாணவர்களும், முதுநிலை திட்டமிடல் (Masters of Planning) படிப்பில் இரண்டாயிரம் மாணவர்களும் என ஆண்டிற்கு 8 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி நடப்பு கல்வி ஆண்டிலேயே, அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலை, திட்டமிடல் பள்ளியில் இளநிலை முதுநிலை திட்டமிடல் பட்டப்படிப்புகள் தொடங்கப்படுகின்றன.

இளங்கலை பட்டப்படிப்பில் எழுபத்தைந்து இடங்களும், முதுகலை பட்டப்படிப்பில் அறுபது இடங்களும் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, முதல் கட்டமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரமைப்பு திட்ட இயக்ககம் ஆகியவை இனைந்து பத்து கோடி ரூபாயை வழங்குகின்றனர்.

அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு தமிழக அரசின் சார்பில் மொத்தம் 18 கோடி 54 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவை என்பதால் போர்க்கால அடிப்படையில் இந்தப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டுமானப் பொறியியல் படித்தவர்களுக்கு இது கூடுதலாக பயன்படும் என்கின்றனர் கல்வி ஆலோசகர்கள். 

மேலும், “கட்டுமான பொறியியல் படித்தவர்கள் முதுகலை திட்டமிடல் படிப்பை முடித்தால் மிகுந்த பயனளிக்கும் என்று கூறுகின்றனர். சமூகத்தில் கட்டப்படும் பொது கட்டிடங்களுக்கு வடிவமைப்பதில் மிகுந்த தேவையும் அரசிற்கு இருக்கிறது. இது போல பல்வேறு துறைகளில் பல்வேறு படிப்புகளை அரசு அறிமுகப்படுத்தவேண்டும்”, என்று கல்வி ஆலோசகர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Anna university introduced a new course for engineering graduates

Best of Express