அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிக எளிதாக அணுகும் வகையில், புதிய கூட்டமைப்பு அடிப்படையில், மின் புத்தகங்கள் மற்றும் மின் இதழ்களுக்கான சந்தா மாதிரியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயக்கு 440 கல்லூரிகளில் உள்ள 5,00,000 பொறியியல் மாணவர்களுக்கு 10,000 இ-புத்தகங்கள் மற்றும் 3,000 மின் இதழ்களை அணுகும் வகையில், 'அண்ணா பல்கலைக்கழக மின் வளக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த திட்டத்துக்கான சந்தா மாதிரியானது செலவினங்களைக் கணிசமாகக் குறைக்கும், இது கல்லூரிகள் சந்தா செலுத்துவதற்கும் மிகவும் செலவு குறைந்ததாக இருக்கும்.
‘அண்ணா பல்கலைக்கழக மின் வளக் கூட்டமைப்பு’ அடுத்த ஆண்டு முதல் 440 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 5 லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மின் புத்தகங்கள் மற்றும் 3,000 மின் இதழ்களை அணுகுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சி தமிழ்நாட்டின் ஆராய்ச்சி வெளியீட்டை மேம்படுத்துவதோடு, பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, பல பதிப்பாளர்கள் பொறியியல் பாடங்களுக்கான புத்தகங்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டனர். இது மின் புத்தகங்களின் அணுகலை அவசியமாக்கியுள்ளது. இருப்பினும், சந்தா கட்டணம் அதிகம் என்பதால், பல கல்லூரிகள் அவற்றைச் செய்வதில்லை.
“இந்தக் கூட்டமைப்பு அடிப்படையிலான சந்தா மாதிரியின் மூலம், பொறியியல் கல்லூரிகள் தங்களது தற்போதைய செலவில் வெறும் 25% முதல் 30% வரை அதிகமான மின் புத்தகங்கள், மின் இதழ்களுக்கு குழுசேர முடியும்” என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“