அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர், நூலகர் உள்ளிட்ட 312 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2021
பேராசிரியர் - PROFESSOR
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 65
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் (B.E. / B.Tech., M.E. / M.Tech) படிப்புகளில் முதல்வகுப்பில் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் Ph.D. படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இணைப் பேராசிரியர் – ASSOCIATE PROFESSOR
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 104
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் (B.E. / B.Tech., M.E. / M.Tech) படிப்புகளில் முதல்வகுப்பில் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் Ph.D. படித்திருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உதவிப் பேராசிரியர் – ASSISTANT PROFESSOR
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 134
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் (B.E. / B.Tech., M.E. / M.Tech) படிப்புகளில் முதல்வகுப்பில் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் Ph.D. படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
நூலகர் – LIBRARIAN
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்புடன் முதுகலை Library Science மற்றும் Ph.D. படித்திருக்க வேண்டும். மேலும் 11 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
துணை நூலகர் – DEPUTY LIBRARIAN
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்புடன் முதுகலை Library Science மற்றும் Ph.D. படித்திருக்க வேண்டும். மேலும் 9 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
உதவி நூலகர் – ASSISTANT LIBRARIAN
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 5
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்புடன் முதுகலை Library Science மற்றும் Ph.D. படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
உடற்கல்வி இயக்குனர் – PHYSICAL DIRECTOR
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்புடன் முதுகலை Physical Education மற்றும் Ph.D. படித்திருக்க வேண்டும். மேலும் 11 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
துணை உடற்கல்வி இயக்குனர் – DEPUTY PHYSICAL DIRECTOR
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்புடன் முதுகலை Physical Education மற்றும் Ph.D. படித்திருக்க வேண்டும். மேலும் 9 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
சம்பளம் : இந்த பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : பேராசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இணைப் பேராசிரியர், துணை நூலகர், துணை உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவிப் பேராசிரியர், உதவி நூலகர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://aurecruitment.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.10.2021
ஆன்லைன் விண்ணப்பம் முடிந்தபிறகு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு 27.10.2021 க்குள் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
முகவரி : The Registrar, Anna University, Chennai – 600 025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://aurecruitment.annauniv.edu/assets/Instructions%20to%20candidates%20-%20Prof.%20Univ.Librarian%20Dir.%20of%20PE.pdf, https://aurecruitment.annauniv.edu/assets/Instructions_to_candidates_Asso_Prof_%20Deputy%20Librarian%20Dy.Dir.%20of%20PE.pdf, https://aurecruitment.annauniv.edu/assets/Instructions%20to%20candidates%20-%20Asst.%20Prof.%20AUL%20Gr_I.pdf, என்ற இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.