அண்ணா பல்கலைக்கழக வேலை வாய்ப்பு; 8th முதல் பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Anna University invites application for project assistant vacancies: அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர், திட்ட உதவியாளர் பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 4 விதமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இடமாற்றத்திற்கான மையத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில் தொழில்நுட்ப வணிகமாக்கல் நிர்வாகி, திட்ட இணை உதவியாளர், திட்ட உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2021.

தொழில்நுட்ப வணிகமயமாக்கல் நிர்வாகி (Technology Commercialization Executive)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 02

கல்வித் தகுதி : B.E / B.Tech  படிப்புடன் MBA படித்திருக்க வேண்டும். 8 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.50,000

திட்ட இணை உதவியாளர் (Project Associate)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 02

கல்வித் தகுதி : B.E / B.Tech / MBA / MCA / M.Sc படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.40,000

திட்ட உதவியாளர் (Project Assistant)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 02

கல்வித் தகுதி : B.E / B.Tech / MCA / M.Com / M.Sc படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.20,000

அலுவலக உதவியாளர் – ஓட்டுனர் (Office Assistant cum driver)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வித் தகுதி : 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கூடுதலாக, 2 வருட பணி அனுபவமும் வேண்டும்.

சம்பளம் : ரூ.16,000

தேர்வு முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/tec%20recruitment%202021.pdf என்ற இணைய தளப்பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி,

DIRECTOR, CENTRE FOR TECHNOLOGY DEVELOPMENT AND TRANSFER ANNA UNIVERSITY, CHENNAI – 600 025

தகுதியுள்ளவர்கள் 25.09.2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anna university invites application for project assistant vacancies

Next Story
7.5% இட ஒதுக்கீடு – தொடங்கியது பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வுTNEA 2021 rank list, TNEA Counselling
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com