Advertisment

NIRF Ranking 2024: சிறந்த மாநில அரசு பல்கலைக்கழக தரவரிசை; அண்ணா பல்கலை. முதலிடம்

NIRF Ranking 2024: முதல் முறையாக வெளியிடப்பட்ட சிறந்த மாநில அரசு பல்கலைக்கழக தரவரிசை; முதலிடம் பிடித்து அசத்திய அண்ணா பல்கலைக்கழகம்; டாப் 10-ல் இடம்பெற்ற கோவை பாரதியார் பல்கலைக்கழகம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anna university chennai

அண்ணா பல்கலைக்கழகம்

NIRF Ranking State Universities 2024: தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தரவரிசை 2024ஐ கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு, அமைச்சகம் இந்தியப் பல்கலைக்கழகங்களை வகைப்படுத்த மூன்று புதிய வெவ்வேறு அளவுகோல்களைச் சேர்த்துள்ளது. இந்த ஆண்டு முதல், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள், திறன் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் மாநிலப் பல்கலைக்கழகங்களும் இடம் பெற்றுள்ளன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Anna University is the number 1 state varsity in India: NIRF Rankings 2024

மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் கீழ், இந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்தது. கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகம் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்தன.

Anna University is number 1 state university in India: NIRF Rankings 2024

மற்ற சிறந்த கல்லூரிகளில் பஞ்சாப் பல்கலைக்கழகம் (சண்டிகர்), உஸ்மானியா பல்கலைக்கழகம் (ஹைதராபாத்), ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), கேரள பல்கலைக்கழகம் மற்றும் கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும்.

இந்த ஆண்டு, மதிப்பீட்டு அளவுகோல்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதம் 1:15ல் இருந்து 1:10 ஆகவும், மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் 1:15ல் இருந்து 1:20 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தரவரிசை கட்டமைப்பானது நிறுவனங்களை ஐந்து பரந்த அளவுருக்களில் மதிப்பீடு செய்கிறது - கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள், அவுட்ரீச் மற்றும் உள்ளடக்கிய தன்மை மற்றும் கருத்து.

சிறந்த பொறியியல் கல்லூரிகள் பிரிவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சென்னை (ஐ.ஐ.டி மெட்ராஸ்) முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐ.ஐ.டி சென்னை, ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி பாம்பே மற்றும் ஐ.ஐ.டி கான்பூர் ஆகியவை முறையே முதல் நான்கு இடங்களைத் தக்கவைத்துக் கொண்டதன் மூலம் முதல் 5 பொறியியல் கல்லூரிகளுக்கான வரிசை ஒரே மாதிரியாக இருந்தது, இருப்பினும் ஐந்து மற்றும் ஆறாவது ரேங்கில் சிறிது மாற்றம் ஏற்பட்டது.

என்.ஐ.ஆர்.எஃப் 2024 தரவரிசையில், ஐ.ஐ.டி காரக்பூர் ஆறாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது, ஐ.ஐ.டி ரூர்க்கி ஐந்தாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்குச் சென்றது. ஐ.ஐ.டி கவுகாத்தி, ஐ.ஐ.டி ஹைதராபாத், மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி ஆகியவை தொடர்ந்து ஏழாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தைத் தக்கவைத்துள்ளன, அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி பனாராஸ் இந்து பல்கலைக்கழகம் 10வது இடத்தைப் பிடித்தது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (IISc) பெங்களூர் பல்கலைக்கழகங்கள் பிரிவில் முதலிடத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), ஜாமியா மில்லியா இஸ்லாமியா அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. சுவாரஸ்யமாக, மூன்று பல்கலைக்கழகங்களும் கடந்த ஆண்டிலிருந்து தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்து அதே இடத்தைத் தக்கவைத்துள்ளன.

பல் மருத்துவப் பிரிவில், சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் முதல் இடத்தையும், மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, மௌலானா ஆசாத் பல் அறிவியல் கழகம் மற்றும் கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Anna University Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment